Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, June 30, 2017

பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட்டால்...


சித்தர்கள் The Ascended Masters

நானே தகப்பன்
நானே தாய் 
நானே குரு
நானே மகன்
நீயும் நானே
அவன், அவள், அதுவும் நானே.

என்னை உணர்ந்தவன்
தன்னை உணர்ந்தவன்.

அவன் வேறு
யான் வேறல்ல.
என்னுள் இரண்டறக் கலந்தவர்
பிறவிப்பிணி நீக்கி
சோதிகதியானார்.

பற்றற்ற முருகனின்
பாதம் பணிந்திட்டால்
பற்றற்ற வாழ்வும்
பர வாழ்வும்
சித்திக்கும்.

"யாமிருக்கப் பயமேன்"

ஓம் முருகா

ஓங்காரக்குடில் Ongarakudil




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


Monday, June 26, 2017

அனைத்திற்கும் ஆதாரம் முருகனே


பிரணவத்தின் சூத்ரதாரியான முருகனே அனைத்திற்கும் ஆதாரமாகி இயக்கமும், ஒடுக்கமுமாகி எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து நின்று இயற்கையோடு இயற்கையாய் கலந்துவிட்ட படியினாலே தேவரிஷி கணங்களும், சர்வ சக்திகளும் மட்டுமல்ல, இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட அத்துணை உயிருள்ள ஜீவராசிகளும் ஆசிகளை வழங்கிடும் அவ்வளவு உயர்ந்த ஆற்றலுடைய முருகனின் நாமங்கள். ஏன் ஜடப்பொருள்கள் கூட கட்டுப்படும்.

அற்புதமான சக்திகளை அருளவல்லதும், ஞானத்தை ஊட்ட வல்லதுமானதும், அனைத்தும் தரவல்லதும், ஏன் முருகனைப் போலவே ஆக்கி கொள்ளக் கூடிய வல்லமைகளையும் அந்த முருகனது நாமங்களே நமக்கு அருளுமென்றால் எப்பேர்ப்பட்ட ஆற்றலுடைந்து முருகனின் நாமங்கள்.

எல்லாம் வல்ல முருகனது நாமங்களை சொல்லி ஆசி பெற விரும்பினால், ஜீவதயவே வடிவான முருகனுக்கு பாத்திரமான உலக உயிர்களுக்கு துன்பம் செய்யாது, உயிர்க்கொலைதவிர்த்து, புலால்மறுத்து, சுத்தசைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.

முருகனது ஜீவதயவு தோன்றுமிடங்களான உலக உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி இதம் புரிவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிக்க வேண்டும் என்பதுவே முருகனது ஆசியைப் பெற முதன்மை தகுதிகளாகும்.

முத்தர்கள் போற்றும்
முருகப்பிரான் திருவடியை
நித்தமும் போற்றிட
நினைத்தவை சித்தியே.

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
 Aum Muruga ஓம் முருகா 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


,

Sunday, June 25, 2017

முருகப்பெருமான் எப்படி வென்றார்..?!



முருகப்பெருமானுக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது. எப்படி எல்லா உயிர்களும் இயற்கைக்கு ஆட்படும்போது முருகப்பெருமான் மட்டும் எப்படி வென்றார்..?!

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களே அனைத்து ஜீவர்கள், ஜடப்பொருட்கள் என இப்பிரபஞ்சத்தில் எல்லா வகையும் தோன்றுதற்கு காரணம் என்றும், அதுவே அவை வளர்வதற்கும், அழிவதற்கும் காரணமாக ஆகி இயற்கையாய் பரிமளித்தது என்று அறிந்து பஞ்ச பூதமானது தோற்ற உருவாகிய பருப்பொருளாய் உள்ளவரை அது இயற்கையின் நியதிக்கு உட்படும் என்றும், அதுவே நுண்பொருளாய் கண்ணுக்கு புலனாகா அரூப நிலையாய் உள்ளபோது அரூபமாய் உள்ள இயற்கை போல ஆகி பரிணாம வளர்ச்சிக்கு ஆட்படாமல் என்றும் இளமையாகவே இருப்பதையும் கண்டு கொண்டார் முருகப்பெருமான்.

தோற்றமாக உள்ள இந்த மனித தேகத்திலேதான் அதற்கான உபாயம் இருப்பதையும் வேறெந்த உடலிலும் அந்த உபாயம் இல்லாததையும் அறிந்து இந்த தேகம் பஞ்ச பூத தேகம், பஞ்சபூதமே ஆன்மாவை சுற்றி மும்மலச் சேறாக நாம் இதன்முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப மலக்குற்றமாக மாறி ஆன்மாவை மாசுபடுத்தி நம்மை வஞ்சித்து கொல்கிறதையும் அறிந்தான்.

மாசு நீங்க வேண்டுமாயின் எந்த உயிர்களுக்கு துன்பம் செய்ததால் மாசு ஏற்பட்டதோ அந்த ஜீவர்களுக்கு அதாவது இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிந்தால் எல்லா உயிர்களும் இதம் செய்கின்ற உயிரை வாழ்த்துவதினால் எல்லா உயிர்களின் வாழ்த்தே ஆன்மாவை ஒளிபெறச் செய்து ஆன்மாவைப் பற்றியுள்ள மாசை நீக்குகிறதையும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி எல்லா ஜீவர்களுக்கும் இரங்கி இதம் புரிவதற்கு வன்மனம் நீங்க வேண்டும். வன்மனம் நீங்க முருகனது ஆசியினால் அன்றி வன்மனம் நீங்காது. முருகனது திருவடி பற்றி பூசிக்க பூசிக்க நம்முள் அறிவு பெருகிடும். அறிவு பெருகினால் மட்டும் போதுமா, போதாது. வெறும் அறிவு நமது சிந்தனையை வளர்க்குமே தவிர ஆன்ம தெளிவை உண்டாக்காது, ஜென்மத்தைக் கடைத்தேற்றாது, பிற ஜீவர்களுக்கு உபகாரம் செய்து செய்து புண்ணிய பலத்தை பெருக்க வேண்டும். புண்ணியம் பெருக பெருக தெளிந்த அறிவு ஞானஅறிவாக மாறி ஆன்மா மாசுபட்டுள்ளதை உணர்த்தும்.

ஆன்மா மாசு நீங்கவும், ஜீவதயவைப் பெருக்கிடவும், தேவையான பொருளாதாரத்தை முருகனது திருவடி பற்றி பூஜை செய்ய செய்ய அதற்கும் அருள்வான் முருகன்.

பொருள் பெருகினால் போதாது, புண்ணியங்கள் செய்ய வாய்ப்பை அருள்வான் முருகன். புண்ணியம் செய்து செய்து ஜீவதயவை பெருக்கி பெருக்கி தூய ஞானஅறிவை பெறபெற பஞ்சபூதக்கட்டு படிப்படியாக உடையது விடும்.

பஞ்சபூதக் கட்டு உடைய வேண்டுமாயின் எந்த இயற்கை பருப்பொருளாக உண்டானதோ அந்த பருப்பொருளை உடைப்பதற்கும் இந்த பஞ்ச பூத சக்திகளே உதவியாய் உள்ளது.

காற்றாகிய பஞ்சபூதத்தின் உதவியால் அனலாகிய பஞ்சபூத சக்தியும் சேர்ந்து பெரும் மாற்றங்களை நமது தேகத்தினுள் ஏற்படுத்தும். அதை தெளிந்த குருநாதன் முன்னிலையில் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான வேதியியல் பொருளாய் செய்ய பஞ்சபூதக்கட்டு உடைந்து படிப்படியாக பருப்பொருளாய் உள்ள தூலதேகம் ஒளி பொருந்திய நுண்பொருள் ஒளிதேகமாக மாறிவிடும்.

இது மிகப்பெரும் ஞான இரகசியமாகும். இதை வழி நடத்த யாராலும் முடியாது. அந்த ஆதி ஞானத்தலைவன் முருகனே நம்மைச் சார்ந்து வழி நடத்தி நம்மை வாசி வசப்பட செய்து தேகத்திலுள்ள மும்மலக்கசடை நீக்கி ஆன்மாவை ஆக்கம் பெற செய்து தூலதேகத்திலே மறையதுள்ள சூட்சும தேகமாகிய ஒளி உடம்பை ஆக்கம் பெற செய்து செய்து இறுதியில் அருட்பெருஞ்ஜோதி வடிவமான ஒளிதேகத்தை பெற வேண்டும்.

இது தலைவன் முருகனால்தான் முடியும் என்பதையும் அறியலாம். வேறு எதனாலும் ஆகாது என்பது உறுதியான உண்மையாகும்.

அப்படி ஆதிஞானத்தலைவன் நம்மை சார்ந்து வழி நடத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றி ஒளி தேகத்தை அளிக்க வேண்டுமாயின் அதற்கு ஏராளமான புண்ணிய பலம் வேண்டும், பூஜை பலம் வேண்டும். வெறும் நூலறிவோ, ஏட்டுக் கல்வியோ, பயிற்சிகளோ ஒருபோதும் உதவாது.

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
ஓங்காரக்குடில் Ongarakudil



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


வள்ளல்பெருமானின் தெய்வமணிமாலை




ThiruArutpa  திருஅருட்பா



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


Friday, June 23, 2017

உலகெங்கும் 2037ற்குள் முருக யுகம்...

உலகெங்கும் 2037ற்குள் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் ஆட்சி.

மனிதன் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்..

அன்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இதுவரைக்கும் பத்து அல்லது இருபது கோடி மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு கடுகு. ஆக இந்த சங்கம் உலக மக்களுக்கு நன்மை செய்ய வந்த சங்கமாகும்.

நாங்கள் இப்பொழுது சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள், இந்த உலகத்தில் இனி தீவிரவாதம் அழிக்கப்படும். இல்லை இல்லை அடக்கப்படும். தீவிரவாதிகளை அடக்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு. அவர்கள் பணிந்தால் ஆதரிப்போம். துணிந்தால் நசுக்குவோம்.

 மனிதர்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற முருகப்பெருமான் வருகிறார். உலக மக்களுக்காக வருகிறார்.

முருகப்பெருமான் ஆட்சிக்கு வந்தால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு இருக்காது. நாட்டில் பருவமழை பெய்யும், உலகில் நிலநடுக்கம் இருக்காது, இயற்கை சீற்றம் இருக்காது, சாந்தமே வடிவான மக்கள் எல்லோரும் இனி எந்த குறையும் இல்லாமல் வாழலாம். அந்த காலமும் வந்துவிட்டது.

யோகம் மிகப்பெரிய இயல்புடையது என்பது அறியாது, முதலில் சைவத்தை கடைப்பிடிக்க சொல்லித்தராமல், காசுக்காக யோகம் சொல்லிக் கொடுப்பவர்கள் இனி நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அல்லது அவர்களது செயல்கள் கட்டுப்படுத்தபடும்.

ஆக இனி போலி ஆன்மீகவாதிகளும், போலி அரசியல்வாதிகளும், போலி மதவாதிகளும் அடக்கப்பட்டு மக்கள் காப்பற்றப்படுவார்கள். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்ற இந்த ஓசை அகிலமெல்லாம் கேட்கப் போகின்றது. ஆகவே இந்த சங்கம் உலகத்தை காப்பாற்றும் என்று நம்பி இருங்கள். நிச்சயம் காப்பாற்றும்.

இப்படிக்கு
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்.
ஓங்காரக்குடில்,
துறையூர்.


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3