Monday, June 5, 2017

கடவுள் யார் ..?!

யார் கடவுள்..?!

"மாலும் மனிதன் 
மலரோனும் தான் மனிதன் 
ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன் 
சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை"
- மகான் ஔவையார்

மனிதன்தான் கடவுள் ஆனான். முற்றுப்பெற்ற ஞானியரே கடவுள். இதை நாமனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறார் முற்றுப்பெற்று வணக்கத்திற்குரிய கடவுள்நிலையை அடைந்த ஞானியான ஆசான் ஔவையார்.

"மாலும் மனிதன்" - திருமாலும் மனிதனே

"மலரோனும் தான் மனிதன்" - பிரம்மாவும் மனிதன்

"ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்" - சிவபெருமானும் மனிதனே

"சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை" - இந்த மானிடரே கடவுளாக முடியும். எத்தனை வேதங்களைக் கற்றாலும், இந்த உண்மையை உணர்ந்தோர் எவருமேயில்லையே என வருத்தப்படுகிறார் முற்றுப்பெற்ற ஞானி ஔவைப் பிராட்டியார்.

இதைத்தான் முற்றுப்பெற்ற ஆசான் திருமூலரும்…

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!"

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும். மனிதன் முயன்றால், முற்றுப்பெற்ற சித்தர்/ஞானியர் வழி நடந்தால் மனிதரும் கடவுளாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், கடவுளரும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். முற்றுப்பெற்ற சித்தர்களைக் குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் மட்டுமே இது சாத்தியம்.

போற்றுவோம் முற்றுபெற்ற சித்தர்களை, அடைவோம் கடவுள் தன்மையை.

கருத்தாக்கம்: அடிகளார் ஆறுமுகஅரங்கர்


Nàthàn கண்ணன் Suryà

ஓங்காரக்குடில் Ongarakudil - London Branch

காணொளி(video):  More videos


Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

No comments:

Post a Comment