Friday, July 14, 2017

2037ற்குள் முருகப்பெருமான் தலைமையில் உலகப்பெருமாற்றம்.



2037ற்குள் முருகப்பெருமான் தலைமையில், சித்தர்கள் வழிகாட்டலில் உலகப்பெருமாற்றம்.
சித்தர்கள் The Ascended Masters

பிறப்பென்பது பேதமை என்ற ஆசான் திருவள்ளுவரின் சத்தியவாக்கிற்கமைய பிறவிப்பிணி நீக்கி மரணத்தை வென்ற வாழும் மகான் ஆறுமுக அகத்திய அரங்கமகாதேசிக அடிகளார்.

இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஞானபண்டிதரான எம்பெருமான் ஆறுமுகப் பெருமானார் தனது ஏழாவது படைவீடாகவும், ஞானத்தமிழ் வளர்க்கும் சங்கமாகவும், கலியுக இடர்நீக்கி தன் தலைமையில் உலகப்பெருமாற்றம் நடைபெறும் இடமாகவும் ஓரிடத்தை தன் சீடர்களான சித்தபெருமக்களுக்கு அறிவித்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஆறுமுக அரங்கன் பிறப்பானென்றும், பின் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபான சித்தர்கள் வழிகாட்டலில், ஞானத்தலைவன் முருகப் பெருமானாரின் முதற்சீடரான அகத்தியப் பெருமான் பெயர் தாங்கி, உலகுக்கு வழிகாட்ட பிரணவக்குடிலாக திருச்சி துறையூரில் ஓங்காரக்குடில் சிறுகுடிசையாக அமைந்து, காலவோட்டத்தில் வளர்ந்து, உண்மை ஆன்மீகத்தை உலகோருக்கு அறிவித்து, உலகப் பெருமாற்றத்தை ஏற்படுத்தும் தலமாகவும், ஆறுமுகனாரின் ஏழாவது படைவீடாகவும் அமையுமென அறிவித்தார்.

ஆறுமுகனார் அறிவிப்புக்கமைய சாதி, மத, இன வேற்றுமைகளற்ற அறக்குடிலாக சித்தர்கள் புடைசூழ ஞானவொளி பரப்பி வருகிறார் ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார். நீங்களும் ஒரு தடவையாவது சென்று கண்ணாரப் பார்த்து, தொண்டு செய்து ஆறுமுகப் பெருமானாரையும், அவர்தம் சீடரான சித்தர்களையும் தரிசித்து ஆசிபெற்றுப் பலனடையுமாறு அன்புடன் திருவடி பணிந்து வேண்டிக் கொள்கிறோம்.
****************************************

ஆசானின் சில அருளுரைகள்:

மகான் ஒளவையார் அருளிய விநாயகர்
அகவல் விளக்கவுரை!
http://youtu.be/LjISsZhS9WE

திருமந்திர உரை
http://youtu.be/6zM7scSnNeg

ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வழிமுறைகள்
http://youtu.be/BTLtdnGws6w

சித்தர்கள் சுவடி மூலமாக மன்னர் இராசராச சோழன், மன்னர் அரிச்சந்திரன் ஆகியோரின் மறுபிறப்பை அறியுங்கள். உலகோரை ஒரு தாய்ப்பிள்ளைகளாக கருதி கலியுகவரதன் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் வழிகாட்டலில் மிகவிரைவில் நடைபெறவுள்ள உலகப்பெருமாற்றம் பற்றி அறியுங்கள்.
சுவடிகள் @
https://twitter.com/Ongarakudil

ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
 Aum Muruga ஓம் மு௫கா 

நன்றி 

நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



No comments:

Post a Comment