இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஞானபண்டிதரான எம்பெருமான் ஆறுமுகப் பெருமானார் தனது ஏழாவது படைவீடாகவும், ஞானத்தமிழ் வளர்க்கும் சங்கமாகவும், கலியுக இடர்நீக்கி தன் தலைமையில் உலகப்பெருமாற்றம் நடைபெறும் இடமாகவும் ஓரிடத்தை தன் சீடர்களான சித்தபெருமக்களுக்கு அறிவித்தார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஆறுமுக அரங்கன் பிறப்பானென்றும், பின் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபான சித்தர்கள் வழிகாட்டலில், ஞானத்தலைவன் முருகப் பெருமானாரின் முதற்சீடரான அகத்தியப் பெருமான் பெயர் தாங்கி, உலகுக்கு வழிகாட்ட பிரணவக்குடிலாக திருச்சி துறையூரில் ஓங்காரக்குடில் சிறுகுடிசையாக அமைந்து, காலவோட்டத்தில் வளர்ந்து, உண்மை ஆன்மீகத்தை உலகோருக்கு அறிவித்து, உலகப் பெருமாற்றத்தை ஏற்படுத்தும் தலமாகவும், ஆறுமுகனாரின் ஏழாவது படைவீடாகவும் அமையுமென அறிவித்தார்.
ஆறுமுகனார் அறிவிப்புக்கமைய சாதி, மத, இன வேற்றுமைகளற்ற அறக்குடிலாக சித்தர்கள் புடைசூழ ஞானவொளி பரப்பி வருகிறார் ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார். நீங்களும் ஒரு தடவையாவது சென்று கண்ணாரப் பார்த்து, தொண்டு செய்து ஆறுமுகப் பெருமானாரையும், அவர்தம் சீடரான சித்தர்களையும் தரிசித்து ஆசிபெற்றுப் பலனடையுமாறு அன்புடன் திருவடி பணிந்து வேண்டிக் கொள்கிறோம்.
****************************************
ஆசானின் சில அருளுரைகள்:
மகான் ஒளவையார் அருளிய விநாயகர்
அகவல் விளக்கவுரை!
http://youtu.be/LjISsZhS9WE
திருமந்திர உரை
http://youtu.be/6zM7scSnNeg
ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வழிமுறைகள்
http://youtu.be/BTLtdnGws6w
No comments:
Post a Comment