Sunday, May 14, 2017

முக்திநிலை எய்த ஞானபண்டிதன் அருளும் வழி.

சொல்லுங்கள் முருகனின் நாமத்தை!
செல்லுங்கள் முற்றுப்பெறும் நிலை நோக்கி!!


இப்பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதே! ஆனால் முருகப்பெருமான் மட்டுமே பரிணாம வளர்ச்சிக்கு உட்படாதவன். பரிணாம வளர்ச்சிக்கு உட்படாத முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி ஆசி பெற்ற அகத்தியர் முதல் வழிவழி வந்திட்ட நவகோடி சித்தரிஷி கணங்களும் முருகன் அருளால் பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளானார்கள். அவர்களைப் போல நாமும் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகாது அதனின்று விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளாகிட முருகன் திருவடியைப் பற்றினாலன்றி முடியாது.

ஜீவதயவினை தொடர்ந்து செய்து செய்து முருகனின் நாமங்களை சொல்லி சொல்லி நாத்தழும்பேறும் வரையும் மனமுருகி சொல்ல சொல்ல பரிணாம வளர்ச்சியின் பாதையினின்று விடுபடும் மார்க்கம் முருகனருளால் புலப்படும். புலப்படும் பாதையில் முருகன் திருவடித்துணையுடன் சென்றுமே ஞானிகள் சூழ பாதுகாப்பாய் சென்றுமே பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபடலாம்.

முருகா ஞானபண்டிதா! ஞானத்தலைவா! செந்தில்நாதா! சிங்காரவேலா! தணிகைநாதா! தணிகாசலனே! அசுரர் கிளை முடித்த அமராபதி காவலனே! தேவசேனாபதியே! குன்றமர்ந்த வேலா! குமாரக் கடவுளே! குகனே! சுவாமிநாதா! செங்கோட்டு வேலவனே! பழனிநாதா! என்றே முருகனின் நாமங்களை விடாது செபிப்போம்.

அவன் புகழ் பாடுவோம்.

 நாமம் சொல்லுவோம். 
முருகன் பெருமையை பரப்புவோம்.
 முருகன் அருள் பெறுவோம். 
மீளஇயலா பரிணாமத்தினின்று 
மீண்டு வெற்றி பெறுவோம்.

சொல்லுங்கள் முருகனின் நாமத்தை!
செல்லுங்கள் முற்றுப்பெறும் நிலை நோக்கி!!

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்

ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
<3 Aum Muruga ஓம் மு௫கா <3

No comments:

Post a Comment