முற்றுமுழுதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் துறவிகள் இணைந்து அமைத்துள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
சுவிற்சர்லாந்து நாட்டில் 24 சைவ ஆலயங்கள் தமிழ் மக்களால் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அல்பன் மலையின் உச்சியில் சுவிற்சர்லாந்து இந்து துறவிகளால் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்திலும் சமய விதிமுறைப்படி உற்சவங்கள், பூசைகள் நடைபெறுகின்றன.
1994 ஆம் ஆண்டு அவர்கள் மனதில் உதித்த கனவின் அடிப்படையில் இந்த ஆலயம் அமைப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆலயம் அமைக்கும் பணிகள் பூர்த்தியாகின. அதன்பின்னர் ஆலயமூர்த்திகள் அமைக்கும் பணி பூர்த்தியாகியது.
ஆலயமூர்த்திகள் ஸ்தாபிக்கும் பணிகள்,ஆலயத்துக்கும் செல்லும் வீதி அமைக்கும் பணி, பக்தர்கள் தங்குமிடம் அமைக்கும் பணி யாவும் பூர்த்தியாகி கடந்த செப்ரெம்பரில்: மஹாகும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
சுவிஸ் பூர்வீக இனத்தைச் சேர்ந்த குருமார்கள், தமிழகத்திலிருந்து வந்த இந்துக்குருக்களின் உதவியுடன் இந்த கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
சற்குரு சரவணபவா சுவாமிகளின் ஆசியுடன் அவரது முன்னிலையில் இந்த கும்பாபிஷேகம் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய நிர்வாகத் தலைவர் வே.கணேசகுமார், உபதலைவர் மகாலிங்கசிவம், பொருளாளர் அற்புதராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இம்முருகன் ஆலயத்தில் மூலமூர்த்தியாக சோமஸ்கந்தர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மூன்றுதலை நாகத்துடன் சிவன்,அம்பாள், முருகன் கொண்ட சோமஸ்கந்தராக மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஆலய உட்பிரகாரத்தில் பிள்ளையார், நவக்கிரகம், நந்தி போன்ற மூர்த்திகளுக்கு தனி ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்துடன் இணைந்து 80 பேர் தங்கக்கூடிய வசதியுடன் கூடிய அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் மலைப்பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ்முருகன் ஆலயத்தின் கிளையாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் தினமும் 3 நேரப்பூசைகள் சுவிஸ்நாட்டவர்களான குருமார்களால் நடாத்தப்பட்டுவருகின்றன.
பெரும் எண்ணிக்கையான சுவிஸ் நாட்டவர்கள் தினமும் ஆலயத்துக்கு சென்று வழிபடுகின்றனர். வாரமொரு தடவை தியானப்பயிற்சியும் கருத்தரங்கமும் நடத்தப்படுகின்றன.
சுவிஸ்லாந்தில் சுவிஸ் மக்களால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது சைவ சமயத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சுவிஸ்லாந்தில் இந்து மதத்திற்கு இப்படியான அங்கிகாரங்கள் பார்க்க அதிசயமானாலும் ஆனால் உண்மை…. என கூறப்படுகிறது…
தகவல் குகநாதன், சுவிட்சர்லாந்து.
May I know address? which canton?
ReplyDeleteimpressed
ReplyDeleteOm Muruga
ReplyDelete