Tuesday, August 2, 2016

முருகன் துதி.



ஏறுமயில் ஏறி விளையாடும் 
முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் 
முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும்
முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற
முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த
முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த
முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள்
நீ அருள வேண்டும்!
ஆதி அருணாசலம்
அமர்ந்த பெருமாளே!

பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்.

No comments:

Post a Comment