Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, August 11, 2017

தானம், தியானம், தவறு செய்..!


புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்தத் துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.


‘என்ன?’

‘நான் உங்களிடம் படித்த தானம், தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’

‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’

‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தானம், தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”

குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தானமும் தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’

‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’

‘இல்லை. நீ தினமும் தானம், தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தானம், தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’

‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தானம், தியானம் நின்றுவிட்டால்?’

"அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?! தன் தவறை உணர்தலே தவத்தின் முதற்படி. 
தானம், சீவதயவு ஞானத்தின் திறவுகோல்கள்உன் தவறை உணர்ந்ந்தால் காலப்போக்கில் நீயாகவே திருந்திவிடுவாய். தானமும் தவமும் செய்வோர்க்கு முற்றுப்பெற்ற குருவருளும், திருவருளும் கைகூடுவதால் வானவர் நாடு வழிதிறந்திடும்."

"எதற்கும் அஞ்சேல், மகனே! வெற்றிவேலவன் அருளால் ஞானவெற்றிகள் உண்டாகும்"

"தொண்டுகள் செய்வோரைக் கண்டுகொள்வோம். துயர்துடைப்போம். தானமும் தியானமும் செய்வீர் உலகீர்"

Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர் அறிவியல் Wisdom of Siththars



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

No comments:

Post a Comment