Wednesday, September 6, 2017

முருகப்பெருமானிடம் கேட்க வேண்டிய வேண்டுகோள்!



ஒரு மனிதன் காலை எழுந்தவுடன் முருகப்பெருமானிடம் கேட்க வேண்டிய வேண்டுகோள்!

• தினமும் எழுந்தவுடன் "ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி" என 12 முறை சொல்ல வேண்டும். 


• எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என 3 முறை சொல்ல வேண்டும்.

• முருகா உன் திருவடிக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கொடு தாயே! வாய்ப்பும் அதற்குரிய உடல்வளமும், மனவளமும் தந்து என்னை காப்பாற்ற வேண்டும் தாயே! உனது ஆசி பெறுவதற்குரிய அறிவும், பரிபக்குவமும் தந்து என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும்.

• ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்ய ஆசைப்படுகிறேன். அதற்குரிய அறிவும் ஆற்றலும் தந்து அருள வேண்டும் என்று உன் திருவடி பணிந்து யாசிக்கிறேன்.

• நீயே என் சிந்தை, செயல், சொல் அனைத்திலும் நீயாக இருந்து என்னை வழிநடத்த வேண்டி உன் திருவடி வணங்கி கேட்டுகொள்கிறேன்.

நீ நானாக வேண்டும்!!
நான் நீயாக வேண்டும்!!
நான் நீ என்ற பேதம் அற்று நானும் நீயும் ஒன்றாக வேண்டும் !!!


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்


Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர் அறிவியல் Wisdom of Siththars



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya